Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Tuesday, May 24, 2016

ஐக்கிய அரபு எமிரேட்சில் இடம்பெற்ற மிகப்பெரிய நகைகொள்ளை.. #Dubai Published by lankaexpressnews on Tuesday 24.05

Print Friendly and PDF
ஐக்கிய அரபு எமிரேட்சில் இடம்பெற்ற மிகப்பெரிய நகைகொள்ளை.. #Dubai
Published by lankaexpressnews on Tuesday 24.05
, 2016  |


- Razana Manaf-

ஐக்கிய  அரபு  எமிரேட்சின்  வர்த்தக நகரான  டுபாயில் அல்  குவைர் பகுதியில்  அமைந்திருக்கும் மலபார்  கோல்ட்  அன்ட்  டயமன்ட் தங்க  மாளிகையில்  இருந்து  7 கிலோ தங்க  நகைகள்  நான்கு  பேர் கொண்ட  ஒரு  குழுவினால்  வெறும் மூன்றே  நிமிடங்களில் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ..

இந்த நகைகளின் மொத்த பெறுமதி  15 லட்சம்  திர்ஹம்கள் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

டுபாய் குற்றத்தடுப்பு  பிரிவினர் வெளியிட்டிருக்கும் மேலதிக குறிப்பில்  இருந்து  தெரிய வருவதாவது

கடந்த  வெள்ளிக்கிழமை அதிகாலை  நான்கு  மணிக்கு நான்கு  பேர்  கொண்ட கும்பலொன்று  மலபார்  கோல்ட் அன்ட்  டயமன்ட்  தங்க மாளிகைக்கு வந்திருக்கின்றது வெளியே யாரும் வருகிறார்களா  என  ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க ஏனைய மூவரும் கடையின்  கண்ணாடி கதவை  உடைத்துக்கொண்டு உள்ளே  சென்று  வெறும்  மூன்றே நிமிடங்களில் நெக்லஸ், காப்புகள், மோதிரங்கள்  என  7 கிலோ பெறுமதியான  தங்க  நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு மயிரிழையில் தப்பியோடியுள்ளனர்.

ஒவ்வொரு  வர்த்தக நிலையங்களிலும் ஆபத்து வேளைகளில்  பொலிசாருக்கு தகவல்  அனுப்பக்கூடிய தானியங்கி  அலாரம்கள் பொருத்தப்பட்டிருப்பதனால் அந்த அலாரமின் தகவலுக்கு  ஏற்ப உடனே  விரைந்த  போலீசார் சம்பவ இடத்தை  அடைந்த  போது  நகை மாளிகை கொள்ளையிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை  ஏற்படுத்தியது..

உடனே  விரைந்து  செயற்பட்ட போலீசார்  பாதுகாப்பு கேமேராக்களை  சோதனை செய்தபோது  வெறும்  மூன்றே நிமிடங்களில்  பெரும்  கொள்ளை ஒன்று  நடத்தப்பட்டிருப்பது ஆச்சரியத்தை  ஏற்படுத்தி இருக்கிறது.. பாதுக்காப்பு கேமேராக்களை  சோதனையிட்டு நாடு  முழுவதும்  தேடுதல் வேட்டையை  ஆரம்பித்த  போலீசார் கொள்ளை  சம்பவத்துடன் தொடர்புபட்ட  நால்வரில் மூவரை வெறும்  48 மணிநேரத்திற்குள் இன்று  மாலை  கைது செய்தனர். ஒருவர்  நாட்டை  விட்டு தப்பியோடியிருப்பதாக குற்றத்தடுப்பு  பிரிவு  போலீசார் தெரிவித்துள்ளனர்..

கைது  செய்யப்பட்ட  மூவரும் பாகிஸ்தான்  நாட்டை சேர்ந்தவர்கள்  எனவும்  தொழில் தேடி  சுற்றுலா  விசாவில்  வந்து தங்கியிருப்பவர்கள்  என்றும் அவர்கள்  அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.. குறிப்பிட்ட  எடை  கொண்ட  நகை அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- Razana Manaf-
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express