சொந்த தங்கையை கடத்திய சிறுவன் தந்தையிடம் 7 இலட்சம் கப்பம் கேட்டான்... இலங்கையில் தான்.
Published by Madawala News on Monday, August 8, 2016 |
சிறுவனொருவன், கப்பம் கோரி தனது சொந்த சகோதரியைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தந்தையின் பராமரிப்பில் விட்டு, வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மூத்த மகன், இசைக் குழுவொன்றை அமைப்பதற்காக தன்னிடம் 500,000 ரூபாய் கோரியிருந்ததாகவும் தனது 15 வயதுடைய மகள் திடீரெனக் காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன் இணைந்து மகளைத் தேடிய போது சந்தேகநபரும் இணைந்து தேடியதாகவும், எங்கு தேடியும் மகள் கிடைக்காமையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>