Published On:
Tuesday, May 24, 2016
பிரிட்டன் முழுவதும் 21 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுஅச்சுறுத்த்தல்
பிரிட்டன் முழுவதும் 21 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுஅச்சுறுத்த்தல்
பிரித்தானியா முழுவதும் GCSE பரீட்சை நாளில் 21 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கென்ட் முதல் நியூகாசல் வரையிலான ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இனம்தெரியாத நபர்களிடம் இருந்து கிடைக்கபெற்ற தொலைபேசி அழைப்புக்களின் மூலமே வெடி குண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கன்டரபரி பகுதிப் பாடலைசாலை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் அழைப்பு மூலம் பாடசாலைக்கு குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் தலையை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரொக்ரோன் பகுதியிலும் வெடிகுண்டு அச்சுறுத்தலினால் ஆரம்பப்பாடசாலை ஒன்று இழுத்து மூடப்பட்டது.
இதேவேளை வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் நாடுமுழுவதும் 21 பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் வெளியேறினர்.
வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை 10.13 க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பாடசாலை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டனர்.
வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பாடசாலைகள்
கன்டர்பரி அகடமி, கென்ட்
பார்மிங் ஆரம்பப் பாடசாலை , மெய்ட்ஸ்டோன்
வோயேஜர் அகடமி, பீட்டர்பரோ
டிஸ்கவர் ஆரம்பப் பாடசாலை, பீட்டர்பரோ
வூட்டன் , உயர் பாடசாலை, பெட்பேர்ட்ஷயர்
ரெட்வுட் பாடசாலை ரொச்டேல்
Oulder Hill School, பாடசாலை ரொச்டேல்
எம்ஸ்வோர்த் ஆரம்ப பாடசாலை, ஹம்ஷயர்
கிங்க்ஷம் ஆரம்பப் பாடசாலை, சிசெஸ்டர்
வைட்லி ஆரம்பப் பாடசாலை, பாறேம்
ரொஸ்புரூக் ஆரம்ப பாடசாலை, ஸ்ரொக்ரோன்
கிரான்மெயார் ஆரம்பப் பாடசாலை, சர்ரே
மேஃபீல்ட் ஆரம்பப் பாடசாலை, கேம்பிரிட்ஜ்
பலகொன் உயர்நிலைப் பாடசாலை,செஷையர்
கிரப்ட்ரீ பாம் ஆரம்பப் பாடசாலை நொட்டிங்கம்
லின்டிஸ்பார்ன் நடுநிலைப் பாடசாலை நோத்தம்பர்லாண்ட்
சார்வில் ஆரம்பப் பாடசாலை, மிடில்செக்ஸ்
டாபென் கொமுயூனிட்டி ஆரம்பப் பாடசாலை, லனெல்லி
பினோ ஆரம்பப் பாடசாலை, எக்சிற்றர்
மிடில்டன் ஆரம்பப் பாடசாலை லீட்ஸ்
Share this article :






0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>