ஆவணங்கள் எதுவுமின்றி இரகசியமாக கடன் பெற்றுக்கொண்டிருந்தால் அதனை மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அதனை ஏன் செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரகசியமான முறையில் கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் கிடையாது எனவும் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் எவ்வித ஆவணங்களும் இன்றி கடன் பெற்றுக்கொண்டிருந்தால் அதனை செலுத்த வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இரகசியமாக பெற்றுக் கொண்ட கடன்கள் பற்றி அரசாங்கம் கவலை கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் பழிவாங்க எத்தனித்திருந்தால் நாட்டை அபிவிருத்தி செய்ய நேரம் கிடைத்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழிவாங்குவதனை நிறுத்திவிட்டு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>