பாலமுனைக்கிளை நிறுவனத்தில் லக்சல நிறுவன அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான சந்திப்பு
லக்சல நிறுவணத்தினால் புடவைக்கைத்தொழில் மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருற்களை தரம் உடையதாய் மாற்றுவதற்கான ஆலோசனைகளும் ,அவற்றை மொத்தமாக கொள்வனவு செய்தலும் இதனால் உற்பதியாளர்களுக்கு சிறந்த தொழில்நுற்ப அறிவுரைகளை வழங்குவதோடு,லக்சல நிறுவனத்தை உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக ஏற்படுத்தி லக்சல நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்தல் என்பன கவணத்தில் கொள்ளப்பட்டு
நேற்று( 14-05-2016)பாலமுனையில் கைத்தொழில் உற்பத்தியார்களுக்கிடையிலான சந்திப்பும்,அதிகாரிகளுக்கான கலந்துரையாடலும்
DTI ஏற்பாட்டில் புடவைக்கைத்தொழில் பாலமுனைக்கான கிளை நிறுவணத்தில் இடம் பெற்றது.
இதில்
SLITA அதிகாரிகள்,
DTI அதிகாரிகள்
National dishing centre அதிகாரிகள்
NCC அதிகாரிகள் லும் கலந்து கொண்டனர் .
இடைத்தரகர்கள் இன்றி கைத்தொழிலிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருற்களை கொள்வனவு செய்வது பற்றியும் அவற்றினை தரமுடையாக உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளும் ,உல்லாசப்பயனிகளின் கவணத்தை ஈர்க்கக்கூடிய பொருற்களை உற்பத்தி செய்வது பற்றியும் லக்சல நிறுவணத்தின் CEO அலி அஹ்லம் நவாஸ் அவர்களினால் அலோசனைகளும் ,கருத்துக்களும் வழங்கப்பட்டன.
மேலும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தேவையான ஆலோசனைகளும் Ceo யினால் வழங்கப்பட்டது
இச்சந்திப்பின் பின்னர் புடவைக்கைத்தொழில் செய்யும் இடத்துக்கு CEO நவாஸ் மற்றும் ,பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் சென்று பார்வை இட்டதோடு அவரக்களின் தரமான உற்பத்திகளை கொள்வனவு செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.








0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>