Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, May 18, 2016

அரநாயக்காவில் மண்சரிவு - 150 குடும்பங்கள் புதையுண்டதாக அச்சம்

Print Friendly and PDF
Wednesday, May 18, 2016
அரநாயக்கவில் மண்சரிவு, 150 குடும்பங்கள் புதையுண்டுள்ளதாக அச்சம்..! - new video

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின்மாவனெல்ல அரநாயக்க சிசிரபுர பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 150 குடும்பங்கள் புதையுண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 80 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் கூறும் இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தொடரும் அடை மழையை அடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மண்சரிவில் புதையுண்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவனெல்ல அரணநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிசிரபுர  கிராம் புதையுண்டது.
தொடரும் மழை காரணமாக தொடர்ந்தும் மண்சரிவுகள் பதிவாகி வருவதால் மீட்புப்பணிக்காக அனுப்பிவைக்கப்பட்ட இராணுவத்தினரும் பொலிசாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது தடைப்பட்டிருப்பதாக இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ்  தொிவித்தார். மேலதிக தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அறியத்தரப்டும்


எலங்கபிட்டிய எனும் மலைத்தொடர் இருக்கிறது. இந்த மலை ஆரம்பமாகும் பகுதியில்தான் சிசிரபுர கிராமம் இருக்கிறது.

பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில், உதாகம திட்டத்தின்கீழ் மலைவாரத்தின் வீடமைப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது. இந்த கிராமம்தான் இன்று முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

தனிச்சிங்கள கிராமமான குறித்த பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவந்துள்ளன. ஆனால், தம்மிட்டம் பதிவுகள் எதுவும் இல்லையென கிராம சேவகர் கூறிவருகிறார். உண்மையை மறைக்கும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செயற்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

400 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் படையினர் களமிறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயல் கிராமங்களிலுள்ளவர்கள் உதவிகளை வழங்கிவருகின்றனர்

Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express