பிறந்துள்ள புதுவருடத்தையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த தலைக்கு எண்ணெய் வைத்து நீராடும் நிகழ்வில் நீரில் மூழ்கிய நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இதன்படி அத்தனகல்ல ஓயாவில் திஹாரிய பிரதேசத்திலும் கொன்கஹவத்த பிரதேசத்திலும் நீரில் மூழ்கிய 17 மற்றும் 34 வயதான இருவர் ஆபத்தான நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கினிகத்தேனை யட்டிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒருவரும் (வயது 27), கொக்கரெல்ல மெல்சிரிபுரயிலுள்ள ஹோட்டலொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய ஒருவரும் (வயது 27) உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>