Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, April 20, 2016

இந்தியா - பாக்கிஸ்தானுக்கு இவ்வளவு ரசிகர்களா?

Print Friendly and PDF

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசித்தவர்கள் இத்தனை மில்லியனா?


இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்த உலக டி20 போட்டியினை இந்தியாவில் 83 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து விடும். தற்போது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த எதிர்பார்ப்புகள் இன்னும் பல மடங்கு அதிகரித்து விடுகிறது.

2016ம் ஆண்டுக்கான, டி20 உலக கிண்ண போட்டி இந்தியாவில் நடந்தது. இந்த உலக கிண்ண தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், திங்கள் கிழமையன்று ஐ.சி.சி அமைப்பு இந்த ஆட்டம் தொடர்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2007ம் ஆண்டு நடந்த, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடந்த டி20 உலக கிண்ண இறுதி போட்டி தான் இதுவரை அதிகளவில் மக்கள் பார்த்த போட்டியாக இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த முறை நடந்த போட்டியினை சுமார் 83 மில்லியன் இந்தியர்கள் பார்த்துள்ளதாக ஐ.சி.சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 730 மில்லியன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 போட்டியை விட, 114 சதவிகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த டி20 தொடரை அதிகளவில் மக்கள் விரும்பி பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது மட்டுமல்லாமல் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களிலும் இந்த டி20 தொடர் பற்றிய விவாதங்கள் பெருமளவில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express