ஆபாச படம் பார்ப்பவருக்கு 4 லட்சம் சம்பளம்’: அதிரடி விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்.
டென்மார்க் நாட்டில் ஆபாசப்படம் பார்ப்பவருக்கு 4 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என மதுபான நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை வெளியிட்டுள்ளது.
டென்மார்க்கில் உள்ள Aarhus நகரில் Hornsleth என்ற மது அருந்தும் விடுதி அமைந்துள்ளது.
நகரில் மிகவும் பிரபலமான இந்த மது அருந்தும் விடுதி அண்மையில் ஒரு அதிரடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘நாங்கள் புதிதாக ஆண் அல்லது ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம். அவர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
முக்கியமான தகுதியாக வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் அவர் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்க்க வேண்டும்.
இதற்காக அவருக்கு ஒரு தனி கணிணி, ஆபாசப்படங்கள் அடங்கிய டி.வி.டிகள்(DVD) மற்றும் ஒரு தனி அறை ஒதுக்கப்படும்.
நாங்கள் எதிர்ப்பார்ப்பது போல் அவர் ஆபாசப்படங்களை பார்த்து தெரிவானால், அவருக்கு 2,350 பவுண்ட்(4,88,661 இலங்கை ரூபாய்) சம்பளமாக வழங்கப்படும்’ என அதிரடி விளம்பரம் வெளியிட்டுள்ளது.
நூதனமான, வினோதமான, அதே சமயம் எளிமையான இந்த விளம்பரத்தை பார்த்து தற்போது ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இது குறித்து மது விடுதியின் உரிமையாளரான Kristianvon Hornsleth என்பவர் பேசியபோது, ‘வார இறுதி நாட்களில் எங்களது மது விடுதிக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
இவர்களில் அதிகளவில் காதலர்களும் இருப்பதால் அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சரியான இசையை தெரிவு செய்யவே இந்த விளம்பரத்தை தெரிவு செய்துள்ளோம்.
அதாவது, ஆபாசப்படங்களில் வரும் பின்னணி இசையை ரசித்து அதுபோன்ற இசையை மது விடுதி முழுவதும் ஒலிப்பரப்பவே இந்த விளம்பரத்தை வெளியிட்டு புதிய ஊழியரை தெரிவு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>