Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, April 20, 2016

தடைகோரும் ஜெயலலிதா

Print Friendly and PDF
'சொன்னீங்களே... செஞ்சீங்களா?': தடை கோரும் ஜெயலலிதா




அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.

'சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என்ற பெயரில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பதவியில் உள்ள அ.தி.மு.க. அரசு செய்யவில்லை என குறிப்பிட்டு திமுகவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த விளம்பரங்களில், முதல்வர் ஜெயலலிதாவே அந்த வாக்குறுதிகளைக் கூறுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இந்த விளம்பரங்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமீறலாகவும், விளம்பர நியதிகளுக்கு எதிராகவும் இந்த விளம்பரங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இது குறித்து கூறுகையில், சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express