Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, April 20, 2016

1000kg தங்கம் உருவாக்கப்பட்டது.

Print Friendly and PDF
பழைய அப்பிள் போன்களில் இருந்து 1,000 கிலோ தங்கத்தை உருக்கி எடுத்தது அப்பிள்


உலகம் முழுவதும் பழைய அப்பிள் செல்போன்களில் இருந்து சுமார் 1,000 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அப்பிள் நிறுவனம் உருக்கி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பிள் நிறுவன தயாரிப்புகளான அப்பிள் செல்போன்கள்(iPhones), ஐபேட்(iPads) மற்றும் மேக்ஸ்(Macs) போன்றவைகள் விற்பனை செய்யப்பட்ட பிறகு பழையதாக ஆன பிறகு அல்லது அவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால், இந்த தயாரிப்புகள் அமெரிக்காவில் உள்ள Cupertino என்ற நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்படும்.

இவ்வாறு அனுப்பப்படும் இந்த சாதனங்கள் மறுசுழற்சிக்கு(Recycling) அனுப்பப்பட்டு அதில் சேர்க்கப்பட்டுள்ள தங்கத்தை உருக்கி எடுக்கப்படும்.

பொதுவாக, அப்பிள் சாதனங்களில் சிறிய அளவில் தங்கம் சேர்க்கப்பட்டு தான் தயாரிக்கப்படும். இவற்றில் ஏதாவது குறைபாடுகள் அல்லது தேவையில்லாமல் திருப்பி கொடுக்கப்பட்டால், அதில் உள்ள தங்கத்திற்கு பணம் திருப்பி கொடுக்கப்படும்.

இப்படி அப்பிள் நிறுவனங்களுக்கு கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ள தயாரிப்புகளிலிருந்து சுமார் 1,000க்கும் அதிகமான எடையுள்ள தங்கம் உருக்கி எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 28 மில்லியன் பவுண்ட்(5,77,05,09,360 இலங்கை ரூபாய்) ஆகும்.தங்கம் மட்டுமின்றி, திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து 10.4 மில்லியன் கிலோ எடையுள்ள இரும்பு, 2 மில்லியன் கிலோ எடையுள்ள அலுமினியம், 1.4 மில்லியன் கிலோ எடையுள்ள செப்பு, 3,000 கிலோ எடையுள்ள வெள்ளி ஆகிய உலோகங்களும் தனி தனியாக பிரித்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express