Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Friday, March 18, 2016

முகமது நபியையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் – அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

Print Friendly and PDF


இறைதூதரர் முகமது நபியையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எகிப்து நாட்டு சட்ட அமைச்சரின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து நாட்டின் சட்ட அமைச்சரான Ahmed al-Zind என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘எகிப்து நாட்டு சட்டங்களை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?’ என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ‘எகிப்து நாட்டு சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ‘எகிப்து நாட்டு சட்டத்தை இஸ்லாமிய இறைதூதரான முகமது மீறினால் கூட அவரை கைது செய்து சிறையில் அடைப்பேன்’ என வாய் தவறி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

ஆனால், இந்த கருத்தை கூறிய மறுவினாடியே தனது தவறை உணர்ந்து ‘இறைதுதர் என்னை மன்னிக்க வேண்டும். வாய் தவறி இந்த வார்த்தை வந்துவிட்டது’ என அந்த நிமிடமே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த தொலைக்காட்சி பேட்டியை பார்த்த பொதுமக்கள் பலத்த கண்டனங்களை எழுப்பியதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று தனது கைப்பட ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

ஆனால், பொதுமக்களின் மத்தியில் எதிர்ப்பலைகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து எகிப்து நாட்டின் பிரதமரான Sherif Ismail நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தற்போது சட்ட அமைச்சராக பதவி வகித்து வரும் Ahmed al-Zind அவர்கள் இன்று முதல் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக’ அதில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express